காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது...
*இன்றைய சிந்தனை (04.12.2020)* .................................................. *''நேர மேலாண்மை" (Time Management)''* ................................................ காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது... நேரம், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தேவை. எல்லோருக்குமே இது அவசியத் தேவை. நேரம் ஒரு பெரிய வளம். ஆனால்!, பணத்தைப் போல, பொருள்களைப் போல நேரத்தைச் சேமித்துவைக்க முடியாது... நேரத்தைக் கையாள முடியாத நாம் நேரமின்மையைப் பற்றிப் புலம்புவதைத் நாள்தோறும் நடவடிக்கையாகக் கொண்டிருக்கிறோம்... நமக்கு நெருக்கமான நபர்கள் பேசுவதைக்கூட நம்மால் செவி சாய்த்து கேட்க முடியாமல் போகிறது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது... "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. உங்களுடைய அந்தச் செல்வத்த...
Comments
Post a Comment