போதை பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்...!இந்தியா ஐ.நாவில் ஆதரித்து வாக்கு.

புதுடெல்லி , டிச .5 : ஆபத் தான போதைப் பொருட் கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க , இந்தியா ஆதரவு அளித்துள்ளது . ஐக்கிய நாடு கள் போதைப் பொருள் மருந்துகள் ஆணையத்தின் UNO 63 வது கூட்டம் கடந்த புதன் அன்று நடந்தது . அப்போது சர்வதேச அளவில் கஞ்சாவை ஒழுங்குபடுத்தும் வகை யிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன . இதன் படி கஞ்சாவை ஆபத்தான போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது . போதைப் பொருள் மருந்துகள் ஆணையத் தில் மொத்தமுள்ள 53 உறுப்பு நாடுகளில் இந்தியா , அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு கள் உட்பட 27 நாடு கள் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தன . சீனா , பாகிஸ்தான் , ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகள் ஐநா.வின் முடிவுக்கு எதிராக வாக்களித்தன . உக்ரைன் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை . இதனை தொடர்ந்து கடந்த 59 ஆண்டுகளாக கஞ்சா மீது நீடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப் பட்டுள்ளது . தற்போது , 50 க்கும் மேற்பட்ட நாடுகள் கஞ்சாவை மருத்துவ திட்டங்களுக்காக பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது . கஞ்சாவுக்கு இந்த மாநாட்டில் ஆதரவு அளித்த இந்தியாவில் , கஞ்சா ஆபத்தான போதைப் பொருட்கள் பட்டியலில் இருக்கிறது . இதை பயன்படுத்துபவர்கள் , வளர்ப்பவர்கள் , வைத்திருப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...