திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் நிறுவனம் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு ....
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் நிறுவனம் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தத்தனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு - நீர்நிலைகளை மாசுபடுத்தும் காற்றை மாசுபடுத்தி பொதுமக்களை பாதிக்கக்கூடிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் இல்லையேல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் கால்நடைகள் வளர்த்தல், பால் வியாபாரம் விவசாயக் கூலி வேலைகள் செய்து வருகின்றனர் தமிழக அரசு இப்பகுதியில் விவசாயத்தை அழித்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க உள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் தத்தனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுக...
Comments
Post a Comment