சேவூர் அருகே இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3வயது குழந்தை.

சேவூர் அருகே இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3வயது குழந்தை.

சேவூர்,
சேவூர் அருகே 3வயது பெண் குழந்தை இந்தியாவில் உள்ள 22 மொழிகளை குறைந்த நேரத்தில் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சேவூர் அருகே லூர்துபுரம், ஓனாய்பாறை பகுதியை சேர்ந்தவர் ரவி (35). இவர் பட்டப்படிப்பு முடிந்து விட்டு தனது தோட்டத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயிசில் (28) இவர்களுக்கு ஆக்னலோகிரேசியல் (6) என்ற மகனும், ஆண்டோனா சோலீக் (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3 வயது மகள் இந்தியாவில் உள்ள 22 மொழிகளின் பெயர்களை அதிவேகமாகவும், குறைந்த நேரத்திலேயேயும் (9 வினாடிகளில்) உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் இந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர்களிடம் கேட்டபோது, எங்களது மகள் ஆண்டோனாசோ லீக், ஒன்றரைவயது இருக்கும் போதே நாங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும், பேசினாலும் கூர்ந்து கவனித்து வந்தாள். பிறகு நாளாக நாளாக நாங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க தொடங்கினாள். இது எங்களுக்கு மிக பெரிய ஆச்சரித்தையும், சந்தோஷசத்தையும் கொடுத்தது. இதை தொடர்ந்து தமிழ் எழுத்துக்களை ("அ,ஆ, இ,ஈ")சொல்லிக்கொடுத்தோம். அதையும் உடனடியாக உச்சரிக்க தொடங்கினாள். தொடர்ந்து குழந்தையின் ஆர்வத்தை பார்த்த எங்களுக்கு ஏதாவது சாதனை படைப்பாள் எனஎண்ணினோம்.மேலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களையும், மாநிலத்தின் தலைநகரங்களை சொல்லி கொடுத்தோம். இதை நன்றாக புரிந்து கொண்டு நாங்கள் மாநிலத்தின் பெயரை சொன்னால் உடனடியாக அதன் தலைநகரத்தை, உதரணமாக தமிழ்நாடு என்று சொன்னால் சென்னை என்று தலைநகரத்தை சொல்வாள். 7 கண்டங்களையும் விரைவாக சொல்வாள்.
இந்தியாவில் உள்ள மொழிப்பெயர்கள்
இதையடுத்து 3 நாட்கள் பயிற்சியில் இந்தியாவில் உள்ள 22 மொழிகளையும் மிக வேகமாகவும், குறைந்த நேரத்தில் சொன்னாள். இது ஏதாவது சாதனை புத்தகத்தில் இடம் பெற காத்திருத்தோம். எதிர்பார்த்தை போலவே இதற்கு முன்னதாக 3 வயது குழந்தைகளில் எங்களது குழந்தை ஆண்டோனா சோலீக் தான் 9 வினாடிகளில் 22 மொழிகளையும் சொல்லி மத்திய அரசின் இந்திய சாதனை புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்று உள்ளது என்றனர். மேலும் மாதங்கள்,நாட்கள், எண்கள், உடல் உறுப்புகள் மிக விரைவாக சொல்லி வருகிறாள்.பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்து சாதனைகள் செய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என்றனர்.

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...