அத்திக்கடவு - அவினாசி திட்டம் _ வருகின்ற 28 ம் தேதி அடிக்கல் நாட்டு விழா சேவூர் சுற்றுவட்டார பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி சேவூர், பிப்.23- அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி, வருகின்ற 28 ம் தேதி அவினாசியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கு சேவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்திக்கடவு - அவினாசி திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி வட்டமானது ஆண்டிற்கு சராசரி 600 மி.மீ முதல் 700 மி.மீ வரையிலான குறைந்த மழைப்பொழிவைப் பெற்று வரும் ஒரு வறண்ட பகுதி ஆகும்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, சேவூர், பெருமாநல்லூர், ஊத்துக்குளி, காங்கேயம், குன்னத்தூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர் வட்டார பகுதிகள், ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை, புளியம்பட்டி, நம்பியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் இந்த அத்திக்கடவு - அவினாசி திட்டமாகும். இந்த வட்டத்தின் ஒரு பகுதியில் பவானி ஆறு சென்றாலும், இதன் பிற பகுத...