பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்சிறந்த இந்தி கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார்.

வரலாற்றில் இன்று - 08-12-2020

பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன்

சிறந்த இந்தி கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட பண்டிட் பாலகிருஷ்ண சர்மா நவீன் 1897ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள பயானா கிராமத்தில் பிறந்தார்.

1920-ல் காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்துக்கு அறைகூவல் விடுத்தார். அதனால் இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். 

சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது. பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடனும் நல்ல நட்பு ஏற்பட்டது.

இவர் சிறந்த பேச்சாளர். இவருடைய உணர்ச்சி மிக்க உரைகளால் மக்களிடையே விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றார்.

இவரது ஊர்மிளா என்ற காவியம் பெரிதும் போற்றப்படும் இந்தி இலக்கியமாக இன்றளவும் திகழ்கிறது. 1960-ல் பத்ம பூஷண் விருது பெற்றார்.

நாட்டின் சுதந்திரத்துக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுத்து தொண்டாற்றியவருமான பாலகிருஷ்ண சர்மா நவீன் 63-வது வயதில் (1960) மறைந்தார்.

நிருபமா வைத்தியநாதன்

இந்திய டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் 1976ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் ஓய்வு பெற்ற டென்னிஸ் வீராங்கனை ஆவார். 

இவர் கோவையை சேர்ந்த ஒரு டென்னிஸ் வீராங்கனை ஆவார். தனது ஐந்து வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார்.

1995-ம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், டென்னிஸ் போட்டிகளில் குழுப்போட்டி, ஒற்றையர் போட்டி, இரட்டையர் போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய நான்கிலும் தங்கப் பதக்கம் பெற்றார்.

முக்கிய நிகழ்வுகள்

1991ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.

1864ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. 

1877ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நியூசிலத்தின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார் திருமதி Jenny Shipley.

1985ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...