சேவூர் அருகே இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3வயது குழந்தை. சேவூர், சேவூர் அருகே 3வயது பெண் குழந்தை இந்தியாவில் உள்ள 22 மொழிகளை குறைந்த நேரத்தில் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சேவூர் அருகே லூர்துபுரம், ஓனாய்பாறை பகுதியை சேர்ந்தவர் ரவி (35). இவர் பட்டப்படிப்பு முடிந்து விட்டு தனது தோட்டத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயிசில் (28) இவர்களுக்கு ஆக்னலோகிரேசியல் (6) என்ற மகனும், ஆண்டோனா சோலீக் (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3 வயது மகள் இந்தியாவில் உள்ள 22 மொழிகளின் பெயர்களை அதிவேகமாகவும், குறைந்த நேரத்திலேயேயும் (9 வினாடிகளில்) உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் இந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர்களிடம் கேட்டபோது, எங்களது மகள் ஆண்டோனாசோ லீக், ஒன்றரைவயது இருக்கும் போதே நாங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும், பேசினாலும் கூர்ந்து கவனித்து வந்தாள். பிறகு நாளாக நாளாக நாங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க தொடங்கினாள். இது எங்கள...
Comments
Post a Comment