அவிநாசி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்



அவிநாசி, பனியன் நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஒரு தரப்பினர் அவிநாசி காவல் நிலையத்தை புதன்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர் அருகே வடுகபாளையம், அய்யம்பாளையம் சின்ன ஒலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தஅம்மாசை மகன் தனபால்(19). அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த நிறுவனத்தில் உடன் பணியாற்றும் சிறுமிக்கு கட்செவி அஞ்சல் அனுப்பி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறறது. இதையறிந்த, பனியன் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் தனபாலைத் தாக்கியதாகக் கூறப்படுகிறறது.

இது குறித்து தனபால் அளித்த புகாரின்பேரில், சேவூர் போலீஸôர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனபாலைத் தாக்கிய மயில்சாமி, பழனிசாமி மற்றும் தனபால் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர். மேலும், புகார் அளித்த தனபால் மீது அவிநாசி அனைத்து மகளிர் போலீஸôர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பனியன் நிறுவன உரிமையாளர் மயில்சாமி உள்பட 3 பேர் மீது கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ள இளைஞரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை
ஒரு தரப்பினர் புதன்கிழமை இரவு அவிநாசி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, போரட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் போராட்டம் கைவிடப்படாததால், தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், கூடுதல் காவல் காணிப்பாளர் ஜெயச்சந்திரன், அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஆய்வாளர் அருள் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் விரைவில் இளைஞர் கைது செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...