தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை}முதல்வரின் தனிப்பிரிவில் புகார்

தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை}முதல்வரின் தனிப்பிரிவில் புகார்

அவிநாசி, அக். 1}சின்னேரிபாளையத்தில் ரூ.35.26 லட்சம் மதிப்பில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலையில் புற்கள் முளைத்துள்ளால், தொடர்புடைய அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவிநாசி நாயக்கன்தோட்டம் பகுதியைச் சேர்ந்த டி.கே.தியாகராஜன் முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பது}திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னேரிபாளையம் முதல் சாலையூர் வழியாக வளையபாளையம் மாகாளியம்மன் கோயில் வரை ரூ.35.26 லட்சம் மதிப்பில் கடந்த 10 நாள்களுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், கோரை புற்கள் முளைத்துள்ளன. தார் சரியாக ஒட்டாமல் ஜல்லி கற்கள் தனியாக பெயர்ந்து வருகின்றன. தரமற்ற சாலை அமைக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடலடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருந்தது.

Comments

Popular posts from this blog

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் நிறுவனம் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு ....

சேவூர் அருகே இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3வயது குழந்தை.