ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், அவிநாசியில் உயர் மின் கோபுரவிளக்கு அமைக்கப்பட்டது. நீலகிரி எம்.பி. ஆ.ராசா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று வழங்கினார்

ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், அவிநாசியில் உயர் மின் கோபுரவிளக்கு  அமைக்கப்பட்டது. நீலகிரி எம்.பி. ஆ.ராசா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று வழங்கினார்.
திமுக துணைப் பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசாவின் தொகுதி மேம்பாட்டு(உள்ளூர்வளர்ச்சித்திட்டம்) நிதியிலிருந்து, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அவிநாசி திருப்பூர், ஈரோடு சாலை சந்திப்பில் கைகாட்டிபுதூர்புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. உயர் மின் கோபுரவிளக்கு பொது மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.  விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
தேர்தல் வாக்குறுதி மட்டுமல்லாது, தமிழக மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகம் முதலிடத்தில் உள்ளது. அவிநாசி நகரத்தின் நீண்ட காலமாக பொதுமக்களின் கோரிக்கையாகயும்,ஒன்றிய,நகர திமுக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, இந்த உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டிருக்கின்றது. அதை பொதுமக்கள் பயன்பாடிற்காக அர்ப்பணிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
நமது அன்புத்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிபொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு எப்போதெல்லாம் மக்களுக்கு துயர் ஏற்படுகிறதோ? இன்னல் ஏற்படுகிறதோ? இடர் ஏற்படுகிறதோ? அப்போதெல்லாம் ஓடோடி வந்து பணியாற்றக்கூடிய இயக்கமாக திமுக இருந்து கொண்டிருக்கிறது. என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆளுங்கட்சியில் உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு எப்படிப்பட்ட சுற்றுலாக்களை மேற்கொள்கிறார்கள், நிவாரணத்தை மேற்கொள்கிறார்களோ? அதைவிட, கூடுதலாக பலமடங்கு கூடுதலாக இன்னும் சொல்லப்போனால், கொரோனா காலத்தில் வீட்டிற்கு வெளியே வருவதற்கு கூட அதிமுகஅமைச்சர்கள் தயங்கிய நேரத்தில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், திமுகஇயக்கம்தான் ஒன்றிணைவோம் வா. என்ற தலைப்பில், மிகப்பெரிய சக்தியாக விளங்கி எல்லாப்பகுதியிலும், மக்களுக்கும் தேவையான நிவாரனபொருட்கலான அரிசி, துணிமணிகளை வழங்கினர். பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நேரத்தில் கட்டிக்காப்பாறிய இயக்கம்தான் திமுகஇயக்கம். அதற்காக எங்களது சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி நிர்வாகிகளும் தங்களது உயிரைக்கூட பணயம் வைத்தோம். எப்போதெல்லாம் தமிழர்களுக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும்.சோதனை வருகின்றதோ?  அப்போதெல்லாம் அவர்களை காப்பாற்றுகின்ற ஒரு மகத்தான சக்தியாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது தந்தையை போல இருந்துகொண்டிருக்கிறார். மிக விரைவில் தேர்தல் வரப்போகிறது.  இந்த ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? வேறு எதுவும் நடைபெறுவதில்லை. டாஸ்மாக்கில் வருகின்ற வருமானத்தை வைத்து ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தவிர ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இல்லை. எதிர்கால தலைமுறையை வளர்த்து எடுக்கக்கூடிய ஒரு நல்ல எதிர்கால திட்டங்கள் இங்கு இல்லை. அதிமுக ஆட்சியில், மந்திரி சபையில் ஊழல், கமிஷன்,கரெப்சன். தொடர்ந்து குற்றச்சாட்டு,  அது யாருடைய பணம். உங்களது வரிப்பணம். இப்போது அமித்ஷா என்கிற உள்துறை அமைச்சர் வருகின்றார். அமித்ஷா வருவதற்கு இங்கு இருக்கிற மந்திரிசபையே போய் கும்பிடு போடுது. மிசாவை பார்த்த இயக்கம் திமுக. பல பிரதமர்களை உருவாக்கியஇயக்கம் திமுக. பல ஜனாதிபதிகளை உருவாக்கிய இயக்கம் திமுக. சென்னையில் உட்கார்ந்து கொண்டு டில்லியையே ஆட்டுவித்தவர் கலைஞர்தலைவர். ஆனால் இன்றைக்கு பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சிபிஐ. கேஸ்கள் இருக்கு. அந்த கேஸ் எல்லாம் மறைச்சிட்டு, உங்களுடைய வாக்குகளை வாங்கி, உங்களுடைய வாக்குகளை வாங்கி என்றுகூட சொல்லமாட்டேன். ஜெயலலிதாவுக்காக போட்ட ஓட்டு.... அந்த ஓட்டில் இருக்கிற எடப்பாடி பழனிசாமி., முழு தமிழ்நாட்டையும், நீங்கள் கொடுத்த உத்தரவுகளையும், நீங்கள் அளித்த வாக்குகளையும் இன்றைக்கு அமித்ஷா காலிலும், அதேபோல, மோடியின் பாதத்திலும் வைத்து, அடகு வைத்துவிட்டு தமிழ்நாட்டை அடகு வைத்துவிட்டு, அடிமை ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற கேவலம்.
தமிழ்நாடு யாருக்கும் தலை வணங்காத மாநிலம், எந்த ஆதிக்கத்திற்கும் அடிபணியாமல் சுய மரியாதையோடு வாழ்ந்த தமிழர்களை இன்றைக்கு மோடியிடம் அடகு வைத்து பிச்சைபாத்திரத்தை ஏந்திக்கொண்டு, அடிமைஆட்சி செய்து கொண்டிருக்கின்ற எடப்பாடிபழனிசாமி ஆட்சிக்கு பதிலாக, மிக விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவேண்டும். இன்னும் ஐந்து மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது.  இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும், வெற்றி பெற செய்யவேண்டும். திமுக ஆட்சிக்கு வருவதற்கு அனைவரும் முழுமையான பங்களித்து பாடுபட வேண்டும். மக்கள் விரோத பாஜகவின் அடிமை அதிமுக அரசு ஒழிந்து, திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி 2021ல் உதயமாகும். இது உறுதி. என்றார்.
விழாவில், திருப்பூர் வடக்குமாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன், அவிநாசி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சிவபிரகாஷ், நகர செயலாளர் பொன்னுசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சாமிநாதன்,  பொதுக்குழுஉறுப்பினர் சரவணன்நம்பி, மா.பொறுப்புக்குழு ரங்கசாமி, கவிதாவெங்கடாசலம், ஒன்றிய துணைசெயலாளர் வரதராஜன்,  மாவட்டபிரதிநிதி  அவிநாசியப்பன், அன்னூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், சேவூர் ஒன்றிய பொறுப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்விக்னேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...