முறையான, திட்டமிடப்படாமல் கட்டப்படும் வரும் சாக்கடைகால்வாய் பணியை நிறுத்திய பொதுமக்கள் ...

திருமுருகன் பூண்டி நெசவாளர் காலனி விரிவாக்கம் பகுதியில் 

முறையான, திட்டமிடப்படாமல் கட்டப்படும் வரும் 
சாக்கடைகால்வாய் பணியை நிறுத்திய பொதுமக்கள்  

            திருப்பூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7 வது வார்டில் உள்ள காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் ரேடியஸ் அவன்யூ என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பகுதியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. திருமுருகன்பூண்டி பேரூராட்சி சார்பில் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக காலை சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியை காண்ட்ராக்டர் கண்ணன் எடுத்து செய்து வருகிறார். இதற்கு முறையாக நிதி ஒதுக்கப்பட்டதா என்றும் தேர்தலை கருத்தில் கொண்டு அவசர வேலையாக செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
             இந்த சாக்கடை கால்வாய் கட்டும் பணியானது முறையாக சாக்கடை கழிவுநீர் செல்லாமலும், சரியான திட்டம் போடப்படாமலும் செய்யப்படுகிறது. மேலும், இரண்டு இடத்தில எல் வளைவு இருப்பதாலும், அதை ஒட்டியே தரைப்பாலம் இருப்பதுடன் அதன் இரண்டு பக்கமும் நடுவில் குடிநீர் குழாய்கள் போடப்பட்டு இருப்பதாலும் ஏற்கனவே சாக்கடை கழிவுநீர் செல்லாமல் அடிக்கடி அடைத்துக்கொண்டு இருக்கிறது. இத்துடன் சாக்கடை கால்வாய் கட்டும் இரண்டு இடத்தில் மின் கம்பமும் உள்ளது. கட்டினால் இந்த மின்கம்பத்திற்க்கு இடையே தான் கட்டப்படும்.
             இதில் ஒரு எல் வளைவில் ஏற்கனவே 300 மீட்டர் தூரத்தில் இருந்து சாக்கடை கழிவு நீர்வந்து சேரும் இடம் என்பதாலும் வருகிற மழைநீரோ அல்லது கழிவுநீரோ வேகமாக செல்லாமல் ரோடுகளுக்கு வந்துவிடும் என்ற அபாய நிலையிலும் கட்டப்பட்டு வருகிறது. அவசர கதியில் செய்வதால் நீரின் வாட்டமும் இல்லாமல் இருப்பதால் கட்டப்படும் சாக்கடை கால்வாயின் நடுநடுவே கழிவுநீர் தேங்கும் அபாயமும் உள்ளது. இதற்கு மாற்றாக எதிர் பகுதியில் சாக்கடை கட்டினால் கழிவுநீராமானது எந்தவித தடையும் இல்லாமல் சென்றுவிடும். இதை அதிகாரிகள் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
             இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், நேரில் சென்று சொல்லியும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவில்லை. இந்தநிலையில் இந்த சாக்கடை கால்வாயினால் கடுமையாக பாதிக்கப்படுவோர் நேற்று மாலை பணிநடந்த இடத்திற்கு சென்று அங்கிருந்த காண்ட்ராக்டர் கண்ணனிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து அங்கு வேலைசெய்து கொண்டிருந்த பணியாளர்களையும், பொக்கலின் எந்திரத்தையும் தடுத்து நிறுத்தினர். மேலும் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்த பிறகு பணியை தொடரலாம் என்று கூறிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...